

மேசை டிராயரை இழுத்து இழுத்து விளையாடி இருப்பீர்கள். அதைப் போன்ற டிராயர்களைக் கொண்ட சிறிய பீரோவைச் செய்யலாமா?
தேவையான பொருள்கள்:
காலி தீப்பெட்டிகள் 9, பசை, பழுப்பு நிற ‘பள பள’ காகிதம், பழுப்பு நிற மணிகள்.
செய்முறை:
1. மூன்று வரிசைகளாக வரும்படி ஒன்பது தீப்பெட்டி வெளி பெட்டிகளை பசை மூலம் ஒன்றாக ஒட்டிக் கொள்ளுங்கள். இப்போது உள்ளே மூன்று தீப்பெட்டிகள் இடம்பெறும். தீப்பெட்டியின் உள்பெட்டி மேசை டிராயர் போல் செயல்படும்.
2. ஒவ்வொரு டிராயரிலும் பழுப்பு நிற மணியை ஒட்டிக்கொள்ளுங்கள். இதுதான் கைப்பிடி.
3. பழுப்பு நிற ‘பள பள’ காகிதத்தை வெட்டி எடுத்து தீப்பெட்டி பீரோவை முழுவதுமாகச் சுற்றி, ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது உங்களிடம் அழகிய பழுப்பு நிற பீரோ கிடைத்துவிட்டதா?
© Amrita Bharati, 2015