நீங்களே செய்யலாம்: பாம்பாம் கீ செயின்

நீங்களே செய்யலாம்: பாம்பாம் கீ செயின்
Updated on
1 min read

வீடுகளில் அழகாக, விதவிதமாக கீ செயின்களைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல ஒரு அழகான கீ செயினை நீங்களே செய்யலாம். செய்து பார்க்க நீங்க தயாரா?

தேவையான பொருட்கள்

கம்பளி நூல், கத்தரிக்கோல், கண்மணி, வெள்ளைக் காகிதம், கீ செயின்

செய்முறை

கம்பளி நூலை எடுத்து விரல்களில் சுற்றவும் (எவ்வளவு நீளமாகச் சுற்றுகிறீர்களோ அவ்வளவு பெரிய பாம்பாம் செய்யலாம்).

சுற்றிய நூலை சிறிய நூலால் நடுவில் கொஞ்சம் வலுவாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

கட்டிய நூல் எட்டு போல தெரிகிறதா? இப்போது கத்தரிக்கோலைக் கொண்டு அந்த நூலை (யு மாதிரி வடிவத்தில் வரும் இடம்) நடுவே வெட்டுங்கள்.

இப்போது நூல் பார்ப்பதற்கு வட்ட வடிவத்தில் தெரியும், நீட்டிக்கொண்டிருக்கும் நூல்களை ஒரே அளவாக வெட்டி பாம் பாமை சீர்செய்யுங்கள்.

இதன் பிறகு கண்மணிகளை எடுத்து பாம் பாம்னின் நடுவே கண்களாக ஒட்டிக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தில் வாய் வரைந்து, அதை வெட்டி கண்களுக்குக் கீழே ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது ஒரு அழகான பாம் பாம் பொம்மை ரெடி.

பொம்மையின் நடுவே ஒரு கீ செயினை இறுக்கமாகக் கட்டினால், அழகான கீ செயின் கிடைக்கும். இதை உங்கள் அம்மா, அப்பாவுக்குக் கொடுத்து நீங்கள் மகிழலாம்.

படங்கள்: விண்மதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in