

விதவிதமாக விளையாட்டுப் பொருட்கள் செய்து பார்ப்பது உங்களுக்குப் பிடிக்குமா? வானத்தில் பறக்கும் விமானத்தைச் செய்து பார்ப்போமா? இதைச் செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும். செய்து பார்க்க நீங்கள் தயாரா?
தேவையான பொருட்கள்:
கிளிப்
மூன்று ஐஸ்கிரீம் குச்சிகள்
கத்தரிக்கோல்
பசை.
செய்முறை:
ஐஸ்கிரீம் குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை 1.5 செ.மீ அளவில் வெட்டிக்கொள்ளுங்கள். மீதியுள்ள பெரிய துண்டைக் கிளிப்பின் பின்பகுதியில் பசையைக் கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.
வெட்டி எடுத்த சிறிய துண்டைச் செங்குத்தாகப் பெரிய துண்டின் நடுவில் ஒட்டிக்கொள்ளுங்கள். இதுதான் விமானத்தின் வால் பகுதி.
மற்ற இரண்டு ஐஸ்கிரீம் குச்சிகளைக் கிளிப்பின் மேல் பகுதியில் ஒரு குச்சியையும் கீழ் பகுதியில் மற்றொரு குச்சியையும் படத்தில் காட்டியிருப்பது போலப் பசையைக் கொண்டு ஒட்டிவிட்டால் போதும், குட்டி விமானம் தயார்.
குட்டி விமானத்தை அழகுபடுத்த நினைத்தால், உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தீட்டிக்கொள்ளுங்கள்.
படங்கள்: மோ. வினுப்பிரியா