

கப்பல் நல்ல கப்பலாம்
கடலில் செல்லும் கப்பலாம்.
அக்கரைக்குச் செல்லவே
ஆட்கள் ஏறும் கப்பலாம்.
சாமான் ஏற்றும் கப்பலாம்.
சண்டை செய்யும் கப்பலாம்.
கப்பல் தன்னில் பலவிதம்
கடலின் மீது திரியுமாம்.
தூர தேசம் செல்லுமாம்
துறைமுகத்தில் தங்குமாம்.
கலங்கரை விளக்கினால்
கரையைக் கண்டு சேருமாம்.
கப்பல் ஏறி உலகெலாம்
காண வேண்டி ஆசையோ?
செல்வதற்கே அனுமதிச்
சீட்டு எங்கே? காட்டிடு!