

அதோ நிற்குது பாருங்கள்
மூன்று சக்கர மிதிவண்டி
அத்தை கொடுத்த அன்பளிப்பு
மூன்று சக்கர மிதிவண்டி
வாசல் தோட்டம் எங்கெங்கும்
வளைந்து வளைந்து ஓட்டுவேன்
பள்ளம் மேடு பாதையிலே
கவனம் பார்த்து ஓட்டுவேன்
கோவில் வரைக்கும் சென்றுவர
சில நொடிகள் போதுமே
குளத்தைத் தொட்டு மீண்டுவர
ஒரே நொடி போதுமே
முன்புறத்தில் பைகள் தொங்க
அம்மா போல ஓட்டுவேன்
பின்புறத்தில் பெட்டி வைத்து
அப்பா போல ஓட்டுவேன்
மூன்று சக்கர வண்டிக்கு
ஈடு இணை இல்லையே
ஓட்டிக்கொண்டே இருக்கிறேன்
பேச நேரம் இல்லையே