நீங்களே செய்யலாம்: பூப்போட்ட கைக்குட்டை

நீங்களே செய்யலாம்: பூப்போட்ட கைக்குட்டை
Updated on
1 min read

அவசரத்துக்கு முகத்தையும் கையையும் துடைக்கக் கைக்குட்டையைப் பயன்படுத்துவோம் அல்லவா? அந்தக் கைக்குட்டையில் வித்தியாசமான உருவங்களை வரைந்து பார்ப்போமா, குழந்தைகளே?

தேவையான பொருள்கள்:

டிசைனிங் இல்லாத கைக்குட்டை ஒன்று, துணிகளுக்கான பெயிண்ட், ஊசி, உருளைக் கிழங்கு ஒன்று, சாசர்.

செய்முறை:

1. கைக்குட்டையை ஒரு பேப்பரில் விரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. உருளைக் கிழங்கை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

3. இப்போது ஊசி உதவியுடன் உருளைக் கிழங்கில் படத்தில் காட்டியுள்ளது போல பூ வடிவத்தை வரைந்துகொள்ளுங்கள்.

4. சாசரில் சிறிது பெயிண்டை ஊற்றிக்கொள்ளுங்கள். பூ வடிவம் வரைந்த உருளைக் கிழங்கை அதில் தொட்டு கைக்குட்டையில் பல்வேறு இடங்களில் பூ வடிவத்தைப் பதித்துகொள்ளுங்கள். வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தினால் இன்னும் அழகாக இருக்கும்.

5. இந்தக் கைக்குட்டையை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பரிசாகவும் தரலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in