Published : 13 May 2015 12:54 PM
Last Updated : 13 May 2015 12:54 PM

நீங்களே செய்யலாம்: புதுமையான வாழ்த்து அட்டை

வேர்க்கடலையைத் தின்றுவிட்டு மேல் தோலைத் தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் அப்படித் தூக்கியெறியாமல் அந்தத் தோலைக் கொண்டு வாழ்த்து அட்டையை அலங்கரிக்கலாம்.

தேவையான பொருள்கள்:

தடிமனான அட்டை, வேர்க்கடலை தோல், எம்ப்ராய்டரி செய்யத் தேவையான சிறு கண்ணாடித் துண்டுகள், வண்ணங்கள், பசை, மார்க்கர் பேனா, கத்தரி, பென்சில், ஸ்கேல்.

செய்முறை:

1 தடிமனான அட்டையில் படத்தில் காட்டியபடி 10X10 அளவுள்ள இரண்டு சதுரங்களை வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

2 பின்னர் அதை ஒரு வாழ்த்து அட்டை போல் மடித்துக்கொள்ளுங்கள்.

3 வேர்க்கடலைத் தோலில் வண்ணம் பூசிக்கொள்ளுங்கள்.

4 கண்ணாடித் துண்டில் பசை தடவி, படத்தில் காட்டியுள்ளது போல் முன்பக்கத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.

5 அதைச் சுற்றி வேர்க்கடலைத் தோலை ஒரு மலரின் இதழ்கள் போல், அலங்காரமாக ஒட்டிக்கொள்ளுங்கள். இப்படி இரண்டு, மூன்று மலர்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

6 ஒவ்வொரு மலரைச் சுற்றியும் மார்க்கர் பேனா உதவியுடன் அவுட்லைன் வரைந்துகொள்ளுங்கள்.

7 அடுத்து, எழுத வேண்டிய வாழ்த்துச் செய்தியை உள்பக்கத்தில் எழுதிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் உள் பக்கத்திலும் இதைப் போன்ற மலர்களை உருவாக்கி அலங்கரிக்கலாம்.

8 இதைப் போல் எத்தனை வாழ்த்து அட்டைகள் வேண்டுமானாலும் உருவாக்கி நண்பர்களுக்குத் தந்து மகிழுங்கள்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x