

கோடை காலம் வந்தாச்சு
குளமெல்லாம் வத்திப்போச்சு
மழைச்சோறு எடுத்துட்டு
விளையாடி மகிழப்போறோம்
கம்மா புல்லில் புரண்டுவிழுந்து
பல்டி அடிச்சு விரட்டி துரத்தி
கிறுகிறுன்னு சொல்லிச் சுத்தி
விளையாடி மகிழப்போறோம்
நொங்கு மட்டை வெட்டி வச்சு
ரப்பர் டியூப்பை மேல தச்சு
டப டபன்னு வண்டி ஓட்டி
விளையாடி மகிழப்போறோம்
கோலிக்குண்டு வாங்கிவந்து
பூந்தா குழி போட்டுவச்சு
விரல் சுண்டி அடிச்சுத் தள்ளி
விளையாடி மகிழப்போறோம்
கிட்டி கட்டை வெட்டி வச்சு
கேந்தும் குழி வெட்டி வச்சு
சின்னக் கட்டையை அடிச்சு அடிச்சு
விளையாடி மகிழப்போறோம்
காலை நீட்டி கையை வச்சு
வரிசையாக ஓடிவந்து
தாண்டி தாண்டி விழுந்து எழுந்து
விளையாடி மகிழப்போறோம்.