நீங்களே செய்யலாம்: குச்சியில் உலாவும் வண்ணத்துப்பூச்சி

நீங்களே செய்யலாம்: குச்சியில் உலாவும் வண்ணத்துப்பூச்சி
Updated on
1 min read

அழகான வண்ணங்களோடு பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியை வீட்டிலேயே செய்யத் தயாரா குழந்தைகளே?

தேவையான பொருள்கள்:

மரத்தாலான ஐஸ்கிரீம் குச்சி,

மஞ்சள், ஊதா நிற சாக்லேட் (பேப்பர்) உறைகள் தலா இரண்டு

கறுப்பு, சிவப்பு வண்ண ஸ்கெட்ச் பேனாக்கள்

பசை

இரண்டு தீக்குச்சிகள்.

செய்முறை:

1. ஐஸ்கிரீம் குச்சியின் மேல் முனையில் கறுப்பு வண்ண ஸ்கெட்ச் பேனாவால் வண்ணத்துப்பூச்சியின் கண்களை வரைந்துகொள்ளுங்கள். வண்ணத்துப் பூச்சியின் உடல் வளையங்களையும் வரைந்துகொள்ளுங்கள். வண்ணத்துப் பூச்சியின் வாயைச் சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனாவால் வரைந்துகொள்ளுங்கள்.

2. இரண்டு தீக்குச்சிகளை வண்ணத்துப்பூச்சியின் உணர்கொம்பாக மேல் முனையின் அடிப் பகுதியில் பசை மூலம் ஒட்டிக்கொள்ளுங்கள்.

3. மஞ்சள் நிற சாக்லேட் உறையால் வண்ணத்துப்பூச்சியின் சிறகைச் செய்து படத்தில் காட்டியுள்ளது போல் ஒட்டிக்கொள்ளுங்கள். அதே போல் ஊதா நிற சாக்லேட் உறையாலும் செய்யப்பட்ட சிறகை பொருத்திக்கொள்ளுங்கள்.

இப்போது வண்ணமயமான வண்ணத்துப்பூச்சி ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிட்டதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in