

வீட்டில் பிளாஷ்டிக் மலர் கொத்துகளைத் தாங்கியபடி மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஃபிளவர் வேஸைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அதைப் போன்ற ஒரு ஃபிளவர் வேஸைச் செய்வோமா?
தேவையான பொருள்கள்: படத்தில் காட்டியுள்ளது போன்ற செவ்வக அட்டைப் பெட்டி, பெட்டியின் அளவுக்குக் கத்தரிக்கப்பட்ட பச்சை வண்ணக் காகிதம், சிவப்பு வண்ணக் காகிதம், பசை, கத்தரிக்கோல்.
செய்முறை:
1. செவ்வக அட்டைப் பெட்டியின் மேல் மூடியை அகற்றிவிடுங்கள். பின்னர் அதை நன்கு சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
2. அட்டைப் பெட்டியைச் சுற்றிப் பச்சை வண்ணக் காகிதத்தை ஒட்டிக்கொள்ளுங்கள்.
3. சிவப்பு வண்ணக் காகிதத்தில் மலர்களை வரைந்து அவற்றை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மலர்களை அட்டைப் பெட்டியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
4. இப்போது உங்களிடம் அழகான ஃபிளவர் வேஸ் தயாராகிவிட்டது. இதில் காம்புடன் கூடிய அழகான ரோஜாப் பூக்களை வாங்கிச் செருகிக்கொள்ளுங்கள். இதை பிறந்தநாள் பரிசாகக்கூட நீங்கள் கொடுக்கலாம்.
© Amrita Bharati, 2015