விடுமுறையை உற்சாகமாகக் கழிக்கலாமா?
குழந்தைகள் இப்போது கற்றுக்கொள்ளும் திறமைகள்தான் அவர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அல்லவா? குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துகொள்ள தி இந்து வாய்ப்பளிக்க உள்ளது.
‘யங் வேர்ல்ட் சம்மர் ஸ்மார்ட் கேம்ப்’ உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான சிறந்த இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள முகாமில் எட்டு வயதிலிருந்து பதின்மூன்று வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். பல புதிய திறமைகளை உற்சாகமாகக் குழந்தைகள் கற்றுக்கொள்ள இந்த முகாம் வாய்ப்பளிக்கும்.
ரோபோடிக்ஸ், நாடகக் கலை, ஆங்கிலம் அறிவோம், நினைவுத் திறன் நுட்பங்கள், எண் விளையாட்டு எனப் பல அம்சங்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பு இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
எட்டு வயதிலிருந்து பத்து வயது வரையிலான குழந்தைகள் ஒரு பிரிவாகவும், பதின்னொன்று வயதிலிருந்து பதின்மூன்று வயது வரையிலான குழந்தைகள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவார்கள்.
இந்த முகாம் மே 11 - 15 வரை சென்னையில் ஐந்து இடங்களில் நடக்க உள்ளது. பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ. 2,499. இதில் ரோபோட்டிக்ஸ் கிட், தி இந்து ‘யங் வேர்ல்ட்’ ஆறு மாதத்துக்கான சந்தாவும் அடங்கும்.
மேலும் தகவல்களுக்கும், பதிவுசெய்வதற்கும்: >www.thehindu.com/summercamp
