

இலைப் புதிர்
ஒரு மரத்தில் ஒருவிதமான இலை தானே முளைக்கும். மேலே உள்ள மரத்தில் ஐந்து விதமான இலைகள் முளைத்துள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள்.
எண் புதிர்
ஒவ்வொரு வரிசையிலும் சில எண்களைக் கூட்டினால் நூறு வரும். அந்த எண்கள் எவை என்று கண்டுபிடித்து வட்டமிடுங்கள்.
வழிகாட்டுங்கள்
ஆப்பிளின் மேல் நிற்கும் இந்தக் குட்டிப் பாம்பு கீழே வர வழி காட்டுங்கள் பார்ப்போம்
- வாசன்
வித்தியாசம் கண்டுபிடி
இரு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்.
- வாசன்
கண்ணாமூச்சி
உங்களுக்கு மிகவும் தெரிந்த சில பொருட்களும், விலங்குகள் சிலவற்றின் காதுகளும் இங்கே ஒன்றாக கலந்துள்ளன. அவற்றை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
- ராஜே
விடுகதை
1. முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து. அது என்ன?
2. ஒரே பிள்ளைக்கு ஆயிரம் பிள்ளைகள். அது என்ன?
3. கடல் நீரில் வளருவேன். மழை நீரில் மடிவேன். நான் யார்?
4. ஓங்கி வளர்ந்தான்; ஒரு பக்கம் சாய்ந்தான். அவன் யார்?
5. ஓடியாடிக் கத்தும்; உடலைத் தேடி குத்தும். அது என்ன?
6. என்னைச் சுற்றித் தீ. நான் யார்?
7. பல பேருக்கு ஒரு குடுமி. அது என்ன?
- ஜே. ரோஸ்லின், 7-ம் வகுப்பு, எஸ்.டி.சி. பிரான்ச் மிடில் ஸ்கூல், அம்பாசமுத்திரம்.