

பாலுவும், தங்கை கோமதியும் தோட்டத்தில் இறங்கி மழையில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மா அதைப் பார்த்ததும், “மழையில் நனையாதீர்கள், உள்ளே வாருங்கள். சளி பிடிக்கும். ஜூரம் வரும்” என்று எச்சரித்தார்கள்.
மழையும் இன்னும் வேகமாக பெய்யவே பாலுவும், கோமதியும் உள்ளே சென்றார்கள். அன்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இரண்டு மூன்று நாட்களாக அடைமழை தொடர்ந்தது.
இதனால் குழந்தைகளுக்கு ஒரே கவலை. என்ன கவலை? விளையாடவே முடியவில்லையே என்று. ஒரு ஜீ பூம்பா வந்தால் எப்படி இருக்கும்? மழையே வேண்டாம் என்று கேட்டுவிடலாம் என்று குழந்தைகள் நினைத்தார்கள்.
அவ்வாறே அன்று இரவே ஜீ பூம்பா ஒன்று கனவில் வந்தது. குழந்தைகள் ஜீ பூம்பாவிடம் “இனி மழையே வேண்டாம். எங்களால் விளையாட முடியவில்லை” என்று சொன்னார்கள்.
அப்படியா, “ ஜீ…பூம்பா…. மழையே இனி பெய்யாதே…” என்று ஜீ பூம்பா சொல்லிச் சென்றது. உடனே மழையும் நின்றது.
ஒரு வருடம் ஆனது. மீண்டும் மழை பெய்யவே இல்லை. பாலுவும், கோமதியும் மிகவும் வருந்தினார்கள். தோட்டத்தில் இருந்த செடிகள் எல்லாம் காய்ந்து வாடின. ஆறு, குளங்கள் வற்றின. விவசாயம் இல்லாமல் உணவுப் பஞ்சமும் வந்தது. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்தனவா இல்லையா?
அதைத் தெரிந்துகொள்ள ‘குட்டி பாப்பாவின் சேமிப்பு’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அந்தப் புத்தகத்தில் இதேமாதிரி நிறைய குட்டிக் கதைகள் இருக்கின்றன.
நூல்: குட்டி பாப்பாவின் சேமிப்பு
ஆசிரியர்: வெண்ணிலா
விலை: ரூ. 80 வெளியீடு: ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்டு
முகவரி: 8, சீனிவாசன் தெரு, தி. நகர், சென்னை - 17
தொடர்புக்கு: 044-24351872