வரம் தந்த மரம்

வரம் தந்த மரம்
Updated on
1 min read

அந்தக் கிராமத்தில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம். ஒரு காலத்தில் அடர் மரங்கள் இருந்த இந்த ஊரில், இப்போது அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. அந்த ஊரில் ராஜன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன், தன் வீட்டில் ஒரு செடியை நட்டான். அடுத்த நாள் பார்த்தால் அது கருகி இருந்தது. அதைக் கண்டதும் அவனது கண்கள் குளம் ஆயின.

அந்த வருத்ததோடு அவன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு கும்பல் ஓர் மரத்தை வெட்ட முயற்சி செய்துகொண்டிருந்தது. அவன் தான் சேமித்த பணத்தை முழுவதுமாகக் கொடுத்து அந்த மரத்தைக் காப்பாற்றினான். அது ஓர் அதிசய மரம் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. அது அவனிடம் பேச ஆரம்பித்தது.

‘‘மிக்க நன்றி. நீ இன்று என் உயிரை காத்தாய். அதற்கு பரிசாக நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டுமோ கேள்’’ என்றது மரம்.

சிறுவன் ராஜனோ, ‘‘எனக்கு இந்த ஊரின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆசை. செடி கூட வளர்க்க முடியவில்லை. அதற்கு நீ ஒரு வழி கூறு’’ என்றான்.

அதற்கு மரம், “இவ்வூரின் வெப்பம் குறைய, என்னை போன்ற மரங்களை அதிக எண்ணிக்கையில் நீ நட வேண்டும்’’ என்றது.

உடனே சிறுவன், ‘‘இந்த விஷயத்தில் நீயும் எனக்கு உதவ முடியுமா?’’ எனக் கேட்டான்.

அதற்கு மரம், ‘‘சரி, என் மீது அமரும் பறவைகளிடன் சொல்லி, என் விதைகளை ஊர் முழுவதும் தூவச் செல்கிறேன்’’ என்றது.

அதன்பிறகு சிறுவன் ராஜன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிறைய மரங்களை நட்டான். மரங்கள் வளர்ந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைய ஆரம்பித்தது. மழையும் பெய்தது. சிறுவன் ராஜன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

- ம. மனோஜ்கிரண், 8-ம் வகுப்பு, பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in