

குளம் பூராவும் நிறைந்து மலர்ந்திருக்கும் அல்லி மலர்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதைப் போன்ற மலர்களை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அதை பொக்கேவாகக்கூடப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருள்கள்:
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, இளம் ரோஸ் ஆகிய நிறங்களிலான மிருதுவான காகிதம், பச்சை வண்ண மிருதுவான காகிதம் சிறிய துண்டு, சிறிய ஸ்டிராக்கள், பென்சில், கத்தரி, பசை.
செய்முறை:
1. மஞ்சள் வண்ண மிருதுவான காகிதத்தில் படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் கையை வைத்து அதைச் சுற்றிலும் பென்சிலால் வரைந்து, அதை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பென்சில் உதவியுடன் விரல்கள் போன்ற பகுதியின் முனைப் பகுதியில் சுருட்டி விடுங்கள்.
3. இப்போது பென்சிலை உருவிவிட்டு அடிப்பகுதியை ஒரு கூம்பு போலச் சுருட்டிக்கொள்ளுங்கள்.
4. கூம்பின் குறுகிய அடிப்பாகத்தில் சிறிய நீளமான ஸ்டிராவைச் செருகி இரு முனைகளையும் ஒட்டிக்கொள்ளுங்கள்.
5. பச்சை வண்ண மிருதுவான காகிதத்திலிருந்து இலைகளை வெட்டி எடுத்துப் படத்தில் காட்டியுள்ளபடி மலரின் அடிப் பகுதியில் ஒட்டுங்கள்.
இதைப் போல வெவ்வேறு வண்ணப் பூக்களைச் செய்து ஒரு அழகான பொக்கேவை உருவாக்கிக்கொள்ளுங்கள்.