குழந்தைப் பாடல் - சுண்டெலியின் ஆட்டம்

குழந்தைப் பாடல் - சுண்டெலியின் ஆட்டம்
Updated on
1 min read

அடுப்படிக்குள் சுண்டெலி

ஆட்டம் போட்ட சுண்டெலி

அங்கும் இங்கும் ஓடி ஓடி

சட்டிக்குள்ள விழுந்தது

விழுந் தெழுந்த சுண்டெலி

விழிச்சுப் பார்த்த சுண்டெலி

கொழுக்கட்டை சட்டிக்குள்ள

குதித்துப் பார்த்தது சுண்டெலி

கொழுக்கட்டையைத் தூக்கிகிட்டு

கொண்டாட்டம் போட்டுக்கிட்டு

கொஞ்சுண்டு வயிறு நிறைய

கொறிச்சு கொறிச்சு தின்றது

வயிறு நெறஞ்ச சுண்டெலி

வழிய தேடிப் பார்த்தது

வெளியேற தெரியாம

விழி பிதுங்கி நின்றது.

சின்னஞ்சிறு சுண்டெலி

சின்ன மூலைச் சுண்டெலி

வழி தேடி யோசித்து

வாய் விட்டுச் சிரித்தது.

வழி கண்ட சுண்டெலி

படிகட்ட யோசித்து

கொழுக்கடையை எடுத்தெடுத்து

படியைக் கட்டி முடித்தது

படிமேலே ஏறிவந்து

எட்டிப் பார்த்தது சுண்டெலி

எட்டிப் பார்த்த சுண்டெலி

எகிறி குதித்துப் போனது.

- மொ. பாண்டியராஜன், மதுரை.3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in