

ஜாலி புதிர்
ராம், அருண், தீபக் மூவரும் நண்பர்கள். ஒன்பதிலிருந்து பதினொன்று வயதுக்குட்பட்டவர்கள். மூவருக்கும் இனிப்பு பதார்த்தங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இவர்களில் ஒருவனுக்கு காஜு கத்லியும் மற்றொருவனுக்கு குளோப் ஜாமூனும் இன்னொருவனுக்கு ரசகுல்லாவும் உயிர். கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் உதவியுடன் அவர்களுக்குப் பிடித்த இனிப்புப் பதார்த்தத்தையும் அவர்களது வயதையும் கண்டுபிடியுங்கள்.
குறிப்புகள் :
ராமுக்கு முந்திரிப் பருப்பு பிடிக்காது.
அருணுக்குப் பிடிக்காத இனிப்பு ரசகுல்லா
மூவரில் வயதானவன் தீபக்
ராம் தீபக்கைவிட இளையவன் ஆனால் அருணைவிட மூத்தவன்.
தீபக் ரசகுல்லாவை விரும்பிச் சாப்பிடுவான்
இரட்டையர்கள் யார்?
ஒரே மாதிரி உள்ள இந்த ஆந்தைகளில் இரட்டையர்கள் உள்ளனர். இரட்டையர்களைக் கண்டுபிடியுங்கள்.
படப்புதிர்
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒரே ஒரு பறவை மட்டும் பிற பறவைகளில் இருந்து வேறுபடுகிறது. அந்தப் பறவை எது?
© Amrita Bharati, 2014
மேஜிக் எண் விளையாட்டு
இந்த கட்டங்களுக்குள் இருக்கும் எண்களை எப்படிக் கூட்டினாலும் ஒரு மேஜிக் எண் கிடைக்கும். அந்த எண் கிடைக்க விடுபட்ட கட்டங்களை அதற்கேற்றவாறு நிரப்ப வேண்டும். மேஜிக் எண்ணைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
விடுகதை
1. சாட்டை அடி படாமலே சக்கரம் போல் சுழல்வான். அவன் யார்?
2. மண்ணுக்குக் கீழே உருவாகும் சிப்பிக்கு இரண்டு முத்துக்கள். அது என்ன?
3. என்னைப் பார்ப்பதற்கு கண்கள் தேவை இல்லை. நான் யார்?
4. வீதியிலே கிடப்பான்; வீட்டிற்கு அழகு சேர்ப்பான். அவன் யார்?
5. வட்ட தட்டுக்காரன்; விருந்துக்குக் கெட்டிக்காரன். அவன் யார்?
6. வேர் உண்டு; இலையோ,பூவோ,காயோ கிடையாது. அது என்ன?
7. மழையில் விரியும் குடை; வெயிலில் மறையும் குடை.அது என்ன?
- இரா.திவேஷா, கோட்டவிளை, நாகர்கோவில்-3
சுடோகு
உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கத் தயாரா? மேலே உள்ள கட்டங்களில் விடுபட்ட எண்களைப் பூர்த்தி செய்யுங்கள் பார்ப்போம்.
- வாசன்
கண்டுபிடி
கடையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த மீன் கூறில் எத்தனை மீன்கள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
- வாசன்
கண்ணாமூச்சி
இந்தப் படத்துக்குள் சிலவற்றின் தடங்களும், பொருட்களும் கலந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து அட்டவணைப்படுத்த முடியுமா?
- ராஜே