

ஒரு ஊர்ல சிற்பி இருந்தாராம். அவரு சிலை செஞ்சா, அச்சு அசல் மாறாமல் அப்படியே இருக்குமாம். அதனால இவரோட புகழ் ஊரு முழுக்கப் பரவுச்சு. ஊரே புகழ்றதைப் பாத்து இவருக்குத் தலைக்கனம் ஏறிபோச்சு. தற்பெருமை பேச ஆரம்பிச்சிட்டாரு சிற்பி. ஒரு நாள் எமன் சிற்பியோட வீட்டுக்கு வந்தாரு. “இன்னும் 16 நாள்ல உன்னோட உயிரை எடுக்கப் போறேன்’ன்னு சொல்லிட்டு எமன் போயிட்டாரு.
சிற்பிக்கு எப்படித் தப்பிக்கிறதுன்னு தெரியல. என்ன பண்ணலாம்னு யோசிட்டுக்கிட்டு இருந்தாரு. அப்போ அவருக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அவரை மாதிரியே அச்சு அசல் மாறாமல் ஒன்பது சிலைகளைச் செஞ்சாரு. ஒன்பது சிலைகளோட அவரும் போய் மூச்சை அடைச்சுக்கிட்டுச் சிலை மாதிரி நின்னுக்கிட்டாரு. பதினாறாம் நாள் அன்னைக்குச் சிற்பியோட உயிரை எடுக்க எமனோட ஆட்கள் அவரு வீட்டுக்கு வந்தாங்க.
ஒன்பது சிலைகளோட சிற்பியும் சேர்ந்து நிற்கிறாரு. ஒரே மாதிரியான சிலைகளப் பார்த்துட்டு, இதில் உண்மையான சிற்பி யாருன்னு தெரியாம வந்தவங்க குழம்புறாங்க. கடைசி வரைக்கும் அவுங்களால கண்டுபிடிக்கவே முடியல. வேற வழியில்லாம அங்கிருந்து கிளம்பி இந்த விஷயத்தை எமன்கிட்ட போய் சொல்றாங்க அவரோட ஆட்கள். ‘அப்படியா’ன்னு ஆச்சரியப்படுற எமன், நேரடியா அவரே சிற்பியோட வீட்டுக்கு வர்றாரு.
உண்மையான சிற்பியை எமன் கண்டுபிடிச்சாரா? தலைக்கனம் பிடிச்ச அவரோட உயிரை எடுத்தாருன்னு தெரிஞ்சுக்க இந்தப் ‘பொன்மொழிக் கதைகள்’ புத்தகத்தைப் படிங்க. ஒவ்வொரு கதையிலயும் ஒவ்வொரு நீதி போதனையை வைச்சு ஆசிரியர் கதைகள அழகா எழுதியிருக்காரு.
பொன்மொழிக் கதைகள, நீதிக் கதைகள கேட்கவும், படிக்கவும் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? இந்தக் கதைகள எழுதுறவங்க இன்னைக்கு குறைஞ்சி போயிட்டாங்க. அந்தக் குறைய போக்குற விதமா புதுச்சேரிய சேர்ந்த பேராசிரியர் எ.சோதி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்காரு. அந்தப் புத்தகத்தொட பேரு ‘சிறுவர்களுக்கு பொன்மொழிக் கதைகள்’. மொத்தம் 27 கதைகள் இந்தப் புத்தகத்துல இருக்கு. அதுல இருக்கும் ஒரு கதைதான் மேலே நீங்க படிச்சது.