

நியூஸ் பேப்பர், வார இதழ்கள்ள வர்ற புதிர்களுக்கு விடை தேடுறதுன்னா உங்களுக்கு ரொம்ப ஜாலிதான் இல்லையா? மூளைக்கு வேலைய கொடுத்து விடையை எப்படியும் கண்டிபிடிச்சுடுவீங்க. இப்போ அதுக்கு என்னான்னுதானே கேட்குறீங்க? புதிர்களுக்காகவே ஒரு புத்தகம் வந்திருக்கு. அந்தப் புத்தகத்தோட பேரு ‘புத்துணர்ச்சியூட்டும் புதுமைப் புதிர்கள்’.
படப் புதிர், கணிதப் புதிர், ஜாலிப் புதிர், எண் புதிர், உருவ புதிர்ன்னு புத்தகம் முழுசும் ஒரே புதிர் மயம்தான். இந்தப் புத்துகத்துல மொத்தம் 86 புதிர்கள் இருக்கு. எல்லாமே குட்டிப் பசங்களுக்கான அறிவுப் புதிர்கள்தான். புத்தகம் முழுசும் புதிர்கள் இருக்குறதால வீட்டுல பொறுமையா உட்கார்ந்து புதிர்களுக்கு விடைய கண்டுபிடிக்கலாம்.
இந்தப் புத்தகத்தோட ஆசிரியர் மு. அப்பாஸ் மந்திரி புதிர்கள அழகா தொகுத் திருக்காரு. புதிர்கள் அடங்கிய புத்தகங்கள் எப்போதாவதுதான் வரும். இந்தப் புத்தகம் உங்க எதிர்ப்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும்.