

குட்டி குட்டி பூமழையே
பட்டு என்மேல் தெறிக்கின்றாய்
சுட்டி நானும் குளிக்கின்றேன்
விட்டு விட்டுச் சிலிர்க்கின்றேன்
ஊசி ஊசி தூமழையே
வீசி வீசி தூவுகிறாய்
ஏசும் மனிதர் வாயெல்லாம்
பேசிப் புகழும் உன் பெருமை
பட்டு பட்டு பெருமழையே
பட்டுச் சரடாய் வருகின்றாய்
தொட்டு மண்ணைச் சேர்கின்றாய்
பட்ட செடியும் துளிர்க்கிறதே
முத்து முத்து மாமழையே
கொத்துக் கொத்தாய்க் கொட்டுகிறாய்
சொட்டு நீரும் உயிர்நீராய்
தொட்டி கட்டி சேமிப்பேன்