

என்னென்ன தேவை?
வெள்ளைக் காகிதத் தட்டு, பசை, கறுப்பு ஸ்கெட்ச் பேனா, சிவப்புத் தாள், கட்டர்.
எப்படிச் செய்வது?
1. காகிதத் தட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. படத்தில் காட்டியபடி பேனாவால் புள்ளிகளை வையுங்கள்.
3. கோடிட்ட பகுதியை வெட்டி எடுத்துவிடுங்கள்.
4. இப்போது அன்னத்தின் உருவம் கிடைத்துவிடும்.
5. படத்தில் காட்டியபடி சிவப்புத் தாளை முக்கோணமாக அலகுபோல் வெட்டி ஒட்டுங்கள்.
6. ஸ்கெட்ச் பேனாவால் கண் வரையுங்கள்.
7. வெட்டப்பட்ட பகுதியில் இறகு வரையுங்கள்.
8. இறகை அன்னத்தின் உடலில் ஒட்டினால், அன்னம் தயார்.