நேரு மாமா

நேரு மாமா
Updated on
1 min read

எங்க மாமா! தங்க மாமா

எங்களுக்குப் பிடித்த நேரு மாமா !

கோட்டில் வைத்திருப்பார் ரோஜா

நாட்டிற்கு என்றும் ராஜா!

செல்வச் செழிப்பில் பிறந்தவராம்

கல்வியில் சிறந்து விளங்கியவராம்!

நாட்டின் விடுதலைக்குப் போராடி - முதல்

பிரதமராய்ப் பதவி ஏற்றவராம்!

மனிதருள் மாணிக்கம் என்றேதான்

கனிவோடு மக்கள் அழைத்தனரே!

தேசத்தைத் தாண்டிப் புகழ்பெற்றே

ஆசிய ஜோதி ஆனாரே!

குழந்தைகளை மிகவும் நேசித்தார்

நாட்டையே மூச்சாகச் சுவாசித்தார்!

நேரு மாமாவைப் போற்றிடுவோம்

நித்தமும் அவரை வணங்கிடுவோம்! -

பெ. த. மோசஸ் மங்களராஜ்,
ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
யா. ஒத்தக்கடை, மதுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in