

கு
ழு விளையாட்டுகளில் ஒன்று பட்டம் விடுதல். சாதாரண நூலால் மட்டுமே பட்டம் விட வேண்டும். ஆபத்தான மாஞ்சா நூலைப் பயன்படுத்தக்கூடாது. அது சட்டப்படி குற்றம்.
சதுர வடிவ காகிதம், 2 மெல்லிய குச்சிகள், பசை, 2 அடி நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட காகிதம், நூல் கண்டு.
காகிதத்தின் எதிரெதிர் முனைகளைத் தொடும்படி ஒரு குச்சியைப் பசையால் ஒட்டுங்கள். இன்னொரு குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்ற இரு முனைகளைத் தொடும்படி ஒட்டுங்கள். பசை காய்ந்து, குச்சிகள் நன்றாக ஒட்டிக்கொண்ட பிறகு, இரு குச்சிகளும் சந்திக்கும் இடத்தில் நூலைக் கட்டுங்கள். வில் போன்று வளைக்கப்பட்ட பட்டத்தின் கீழ்ப் பகுதியில் 2 அடி தாளை ஒட்டுங்கள். இதுதான் பட்டத்தின் வால்.
மைதானத்துக்குச் சென்று பட்டத்தைக் காற்று வீசும் திசையை நோக்கி மேலே வீசுங்கள். கையால் சுண்டி சுண்டி, கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டத்தை மேலே உயர்த்திப் பறக்க விடுங்கள். உடன் விளையாடுபவர்களின் பட்டத்துடனோ, மரக்கிளைகளிலோ பட்டம் சிக்கி விடாமல் கவனமாக விளையாடுங்கள். எவருடைய பட்டம் அதிக உயரத்திலும் அதிக நேரமும் பறக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர்.
(இன்னும் விளையாடலாம் )