

என்னென்ன தேவை?
செவ்வக வடிவப் பழுப்பு அட்டை – 1
பஞ்சு – சிறிது
சிவப்பு மணி – 1
பல வண்ண மணிகள் – 10
பசை
செல்லோடேப்
பழுப்பு வண்ண ஸ்கெட்ச் பேனா -1
ஸ்கேல்
எப்படிச் செய்வது?
1. பழுப்பு வண்ண அட்டையை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. ஸ்கெட்ச் பேனாவால் படத்தில் காட்டியபடி, ஸ்கேல் வைத்துக் கோடுகளைப் போடுங்கள்.
3. கூம்பு வடிவில் தாளைச் சுருட்டுங்கள்.
4. செல்லோடேப் மூலம் ஒட்டுங்கள்.
5. கூம்பு மீது பஞ்சை ஒட்டி வையுங்கள்.
6. பெரிய சிவப்பு மணியைப் பஞ்சின் நடுவில் ஒட்டுங்கள்.
7. மற்ற மணிகளைச் சுற்றிலும் ஒட்டுங்கள். இதோ கோன் ஐஸ்க்ரீம் தயார்!