

# முந்திரிப் பழத்தை விட முந்திரிப் பருப்பை உலகம் முழுவதும் அதிகம் விரும்புகிறார்கள். முந்திரிப் பழம் என்று நாம் அழைப்பது உண்மையான பழம் அல்ல, பூக்காம்பு. இதை முந்திரி ஆப்பிள் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் போலிப் பழத்தின் அடியில் சிறுநீரக வடிவில் இருக்கும் பகுதியே முந்திரிப் பழம். இதில் தான் முந்திரிப் பருப்பு இருக்கிறது.
# முந்திரிப் பழம் இனிப்பும் புளிப்புமாக இருக்கும். முந்திரிப் பழம் சாப்பிடும்போது சிலருக்குத் தொண்டையில் கரகரப்பு ஏறபடும். பழத்தைச் சற்று வேக வைத்தோ, உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட்டால் கரகரப்பு ஏற்படாது. பிரேசில் நாட்டில் முந்திப் பழச் சாறு விரும்பிக் குடிக்கப்படுகிறது.
# முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியை விட, முந்திரிப் பழத்தில் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது.
# முந்திரி மிதவெப்ப மண்டலத்தைச் சேர்ந்த மரம். அதிக மகசூலும் அதிக லாபமும் தரக்கூடியது.
# கிழக்கு கரையோரத்தில், ஆந்திர பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் வணிக ரீதியாகவும் வளர்க்கப்படுகின்றன.
# முந்திரியின் தாயகம் பிரேசில். முந்திரிப் பருப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. ஐவரி கோஸ்ட், வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
# ஆசிய சமையலில் முந்திரிப் பருப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. முந்திரிப் பருப்பில் அதிக அளவு சத்துகள் இருக்கின்றன. முந்திரிப் பழம், முந்திரிப் பருப்பின் ஓடு, முந்திரிப் பருப்பில் அனாகார்டிக் அமிலம் இருப்பதால், ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் முந்திக் கொட்டையை சுட்ட பிறகு அதிலுள்ள பருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.