இது என்ன நாடு? - டின்டின் கதாபாத்திரம் உருவான நாடு!

இது என்ன நாடு? - டின்டின் கதாபாத்திரம் உருவான நாடு!
Updated on
1 min read

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1) சாக்லெட்டுக்குப் புகழ்பெற்ற நாடு. சாக்லேட் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கிறது.

2) இது ஓர் ஐரோப்பிய நாடு

3) இங்கு உருவான காமிக்ஸ் கதாபாத்திரம் டின்டின்.

4) டச்சு, பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு சமமாக இருக்கிறார்கள்.

5) சாக்ஸபோனும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும் இந்த நாட்டினரால்தான் கண்டுபிடிக்கப்பட்டன.

6) வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நாடு.

7) ஐரோப்பிய யூனியனின் தலைநகரம் இந்த நாட்டில்தான் உள்ளது.

8) கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறக் கொடியுடைய நாடு.

9) பெரும்பாலான மக்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள்.

10) இதன் தலைநகர் பிரசெல்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in