

1- மூன்று எவர்சில்வர் டம்ளர் மற்றும் ஒரு A4 பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள்.
2 - உங்கள் நண்பர்களை அழைத்து அவர்கள் முன்பு இங்கு படத்தில் காட்டியபடி இரண்டு டம்ளர்களுக்கு நடுவே பாலம் போல பேப்பரை வையுங்கள்.
3 - பிறகு அந்த பேப்பர் பாலத்தின் மீது மூன்றாவது டம்ளரை வைக்கும்படி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். உங்கள் நண்பர் அப்படிச் செய்தால் டம்ளர் கீழே விழுந்துவிடும். கீழே விழாமல் நான் வைக்கிறேன் என்று சொல்லுங்கள். உங்கள் நண்பர் ஆர்வமாகப் பார்ப்பார்.
4 - பிறகு இங்குள்ள படத்தின்படி A4 பேப்பரை மடியுங்கள்.
5 - இப்போது இந்த படத்தில் இருப்பது போல பேப்பரை மடியுங்கள்.
6 - பிறகு இரண்டு டம்ளருக்கும் நடுவே மடித்த பேப்பரை பாலம் போல வையுங்கள்.
7 - கடைசியாக முகப்பில் இருக்கும் படத்தின்படி மூன்றாவது டம்ளரை வையுங்கள்.
என்ன அதிசயம்! டம்ளர் கீழே விழாமல் நிற்கிறதா? உங்கள் நண்பரிடம் எப்பூடி என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்.