

வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள்.
விடுகதை
1. அக்கா, தங்கச்சி மூணு பேர்; முக்காடு போட்டவங்க ஆறு பேர். அது என்ன?
2. எதிரியைக் கண்டால் முதுகில் ஒளிந்து கொள்வான். அவன் யார்?
3. சட்டை போட மாட்டான். ஆனால், சட்டையைக் கழட்டுவான். அவன் யார்?
4. ஆயிரம் தச்சர்கள் கூடி அமைந்ததாம் ஒரு மண்டபம். ஒருவன் கைபட்டு அது உடைந்ததாம். அது என்ன?
5. நான்கு கால் இருக்கும், நாற்காலியும் அல்ல; நம்மை நாள் தோறும் சுமக்கும், குதிரையும் அல்ல. அது என்ன?
6. பெட்டியைத் திறந்தால் கிருஷ்ணன் பிறப்பான். அது என்ன?
7. மரம் சறுக்கு, இலை பரப்பு, பழம் தித்திப்பு, காய் துவர்ப்பு. அது என்ன?
8. நாலு மூல சதுரம், நந்தவனம் தோப்பு, இலை தள்ளி கொலை தள்ளுது. அது என்ன?
9. போன ரயில் திரும்ப வராது. அது என்ன?
10. சிந்திக்க வைத்து செயல்படுவேன். நான் யார்?
வார்த்தைத் தேடல்
இயற்கைப் பேரிடர்கள் என்னென்ன?
கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் இயற்கைப் பேரிடர்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. கண்டுபிடிக்கமுடியுமா?