குழந்தைப் பாடல்:  க்ரோக் க்ரோக் தவளை

குழந்தைப் பாடல்: க்ரோக் க்ரோக் தவளை

Published on

க்ரோக் க்ரோக் என்று

சத்தம் கேட்குது!

மரத்தடியில் தவளை ஒண்ணு

அமர்ந்து இருக்குது!

சின்ன வயிற்றை ஊதியே

பெரிது ஆக்குது!

மீண்டும் சின்ன தாக்கியே

வித்தை காட்டுது!

அங்கும் இங்கும் கண்களை

உருட்டிப் பார்க்குது!

பசியைத் தீர்க்க நல்லதொரு

இரையைத் தேடுது!

பூச்சி ஒண்ணு வந்ததும்

நாக்கை நீட்டுது!

கண் இமைக்கும் நேரத்தில்

பிடிச்சுத் தின்னுது!

பின்னங் காலை ஊன்றியே

துள்ளித் தாவுது!

குட்டைக்குள் குதித்து நொடியில்

மறைந்து போகுது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in