கதைப் போட்டி அறிவிப்பு

கதைப் போட்டி அறிவிப்பு
Updated on
1 min read

நவம்பர் 14, 15, 16 தேதிகளில் அழகுத் தமிழில் கதை சொல்லும் போட்டி அறிவித்திருந்தோம்.

அதிகாலையில் இருந்து இரவுவரை குழந்தைகள் கதைகளைச் சொல்லித் தீர்த்துவிட்டார்கள்!

ஏற்கெனவே கேட்ட கதைகளாக இருந்தாலும்கூட குழந்தைகளின் மழலைத் தமிழில் கேட்கும்போது, தனி அழகாக... தேன் சுவையாக இருந்தது. கொங்கு தமிழ், மதுரைத் தமிழில் ஏற்ற இறக்கங்களோடு பிஞ்சுக் குரலில் கதைகளைக் கேட்கும்போது பிரமாதமாக இருந்தது!

மூன்று நாட்களில் மொத்தம் 2,476 கதைகளைச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் கேட்கப்பட்டு, பல சுற்றுகளில் பரிசீலனை செய்யப்பட்டு, மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று நடுவர்கள் இறுதிக் கட்டத் தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒரே வாரம் காத்திருங்கள்! ரொம்ப ரொம்ப அழகாகக் கதைகளைச் சொன்ன 'கதை சொல்லிகள்' யார் யார் என்பது தெரிந்துவிடும்.

கதைப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் எங்களின் அன்பான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த வாரம் மாயாபஜாரில் சந்திப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in