மேஜிக் மேஜிக்: ஊசியை மிதக்க வைப்போமா?

மேஜிக் மேஜிக்: ஊசியை மிதக்க வைப்போமா?
Updated on
1 min read

அறிவியலை அடிப்படையாக வைத்து ஏராளமான மேஜிக்குகள் இருக்கின்றன. அதில் ஒரு மேஜிக்கைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

கண்ணாடி டம்ளர், டிஸ்யூ பேப்பர், ஊசி.

செய்வது எப்படி?

1. ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் ஊசியைப் போட்டு மிதக்க வைக்க முடியுமா என்று உங்கள் நண்பர்களிடம் சவால் விடுங்கள். அவர்களும் ஊசியைத் தண்ணீரில் போட்டுப் பார்ப்பார்கள். ஊசி தண்ணீரில் மூழ்கிவிடும்.

2. உடனே நான் ஊசியை மிதக்க வைக்கிறேன் என்று கூறிச் சவாலில் இறங்குங்கள். முதலில் தண்ணீரில் ஒரு டிஸ்யூ பேப்பர் துண்டைப் போடுங்கள்.

3. பிறகு அதன் மீது ஊசியை எடுத்து வையுங்கள்.

4. சிறிது நேரத்தில் டிஸ்யூ பேப்பர் நீரில் நனையும்.

5. நனைந்த டிஸ்யூ பேப்பர் தண்ணீரில் மூழ்கும்.

6. இப்போது ஊசி மட்டும் மிதக்கும். இதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போவார்கள்.

மேஜிக் ரகசியம்

நீரில் மிதக்கும் டிஸ்யூ பேப்பர், நீரில் நனைவதால் அடர்த்தி அதிகமாகும். அதன் காரணமாக நீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், அதன் மீது வைக்கப்பட்ட ஊசி, நீரின் பரப்பு இழப்பு விசையின் காரணமாக நீரில் மூழ்காமல் மிதக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in