

கீழே 10 குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகள் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது எனக் கண்டுபிடித்து சொல்கிறீர்களா? கண்டு பிடித்தவர்களுக்குப் பாராட்டுகள்.
1. உலகின் இரண்டாவது பெரிய நாடு
2. கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும் கொண்டது
3. உயரமான கட்டிடங்களில் ஒன்று இந்த நாட்டில் உள்ளது.
4. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டுமே ஆட்சி மொழிகள்.
5. இந்த நாட்டுக்கு இரண்டு தேசிய விளையாட்டுகள் உண்டு. அவற்றில் ஒன்றைத்தான் ஒளிப்படத்தில் பார்க்கிறீர்கள்.
6. இந்த நாட்டின் தேசிய விலங்கு நீர் எலி (Beaver).
7. 1976-ம் ஆண்டு ஒலிம்பிக் இந்த நாட்டில் உள்ள மான்ட்ரியல் நகரில் நடைபெற்றது.
8. இதன் கொடியில் இடம்பெற்றுள்ளது மேப்பிள் இலை (ஒளிப்படம்).
9. இதன் தலைநகர் ஒட்டாவா.
10. இதன் எல்லைப் பகுதியில் நயாகரா அருவி உள்ளது