

மிதித்தால் நகரும் வண்டி
மிடுக்காய் ஓடும் வண்டி
சக்கரம் இரண்டைச் சுற்றி
சவாரி போகும் வண்டி!
சிறுவர் பெரியவர் எவருக்கும்
சிக்கன மான வண்டி
சிட்டாய்ப் பறந்து சேருமிடம்
சீக்கிரம் போகும் வண்டி!
தினமும் ஓட்டி வந்தால்
காலுக்கு வலிமை உண்டு
உடலுக்கு உறுதி கொடுக்கும்
பயிற்சி அதிலே உண்டு!
எரிபொருள் ஏதும் வேண்டாம்
எளிதாய் தூரம் போகும்
வீட்டில் நிறுத்திவைக்க
கொஞ்சம் இடமே போதும்!
மோட்டார் வாகனம் போல
கரிபுகை ஏதும் இல்லை
பூமியை வெப்ப மாக்கும்
மாசு வருவது இல்லை!
இயற்கை அழிவைத் தடுக்க
சுற்றுச் சூழலைக் காக்க
நாமும் முடிவு எடுப்போம்
மிதிவண்டி பயணம் போக!