

தேவையான பொருட்கள்
உபயோகமில்லாத குண்டு பல்பு, வெள்ளை அட்டை பேப்பர், டிரேசிங் பேப்பர், பென்சில், கறுப்பு பெயிண்ட், சிறிய பாட்டில் மூடி, கத்தரிக்கோல், பசை.
செய்முறை
1. ஒரு வெள்ளை அட்டையை இரண்டாகப் பிரித்து கத்தரிக்கவும். ஒரு பாகத்தை இரண்டாக மடிக்கவும். மடித்த பக்கத்தின் மீது டிரேசிங் பேப்பரை வைத்து முயல் முகத்தின் ஒரு பக்கம் மட்டும் படத்தில் காட்டியிருப்பது போல பிரதியெடுக்கவும். கத்தரிக்கோல் மூலம், அதன் அவுட்லைனை வெட்டவும். இப்போது வெள்ளை அட்டையை விரித்தால், முயலின் முகம் முழுவதும் உருவாகியிருக்கும்.
2. இப்போது அட்டையின் இன்னொரு பாகத்தை நீளவாக்கில் இரண்டாக மடிக்கவும். இதில் முயலில் காது, மீசை, வால் பகுதியை வரைந்து, அவுட் லைனை வெட்டவும்.
3. பல்பைச் சுத்தம் செய்யவும். பல்பை ஹோல்டரில் மாட்டும் பகுதியில் முயலின் முகத்தை ஒட்டவும். இப்போது மீசை மற்றும் காதுப்பகுதியை ஒட்டவும்.
4. வால் பகுதியை பல்பின் அடியில், பின்பக்கமாக ஒட்டவும்.
5. கறுப்பு பெயிண்ட் மூலம் முயலின் கண், மூக்கு, வாய்ப்பகுதிகளை வரையவும். பல்பின் உருண்டைப்பகுதியில் முயலின் பாதங்களை வரையவும்.
6. பல்பை, பாட்டில் மூடியின் மேல் வைத்து ஒட்டவும். அழகான பல்பு முயல் உங்கள் ரைட்டிங் டேபிளை அலங்கரிக்கும்.