

என்னென்ன தேவை?
காலி தீப்பெட்டி – 1
தீக்குச்சி -1
கத்திரிக்கோல் – 1
எப்படிச் செய்வது?
1. தீப்பெட்டியின் மேல் அட்டையை மட்டும் எடுத்து, சமமாக அழுத்துங்கள். நான்கு சம பங்குகளாகப் பிரித்து, கத்திரிக்கோலால் வெட்டுங்கள்.
2. நான்கு துண்டுகள் கிடைத்துவிடும். படம் 2-ல் காட்டியுள்ளபடி ஒரு துண்டுக்குள் இன்னொரு துண்டைச் சொருகுங்கள்.
3. நான்கு துண்டுகளையும் இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக இணையுங்கள்.
4. படம் 5-ல் காட்டியபடி நான்கு துண்டுகளையும் இழுத்தால், நடுவில் சிறுது துளை மட்டும் தென்படும்.
5. அந்தத் துளைக்குள் தீக்குச்சியின் தலைப் பகுதி கீழே வருமாறு சொருகுங்கள்.
6. தீப்பெட்டி பம்பரம் தயார். வழவழப்பான தரையில் தீக்குச்சியைச் சுற்றிவிட்டால் பம்பரம் சுழ