

வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
- புதிர்: வாசன்
விடுகதை
1. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டுமே உள்ள சிறகில்லாத பறவை. உலகமே சுற்றும்? அது என்ன?
3. உலகம் பூராவும் படுக்கை விரித்தும், உறங்காமல் அலை பாய்கிறான். அவன் யார்?
4. காற்று வீசினால்தான் இந்த மரத்துக்கு அழகு. அது என்ன?
5. சட்டையைக் கழற்றினால் அழ வைத்துவிடுவான். அவன் யார்?
6. எப்போதும் காதோரம் ரகசியம் பேசும் செல்லத் தோழி. யார் அவள்?
7. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல். அது என்ன?
8. பச்சைக் கிளையில் மஞ்சள் குருவி. அது என்ன?
9. கண்ணைக் குத்தித் தின்றேன். பசி போயே போச்சு. அது என்ன?
10. மீன் பிடிக்கத் தெரியாது. ஆனால், வலை பின்னுவான். அவன் யார்?
விடுகதை போட்டவர்: பி. கிருஷ்ணன், 5-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊத்துக்குளி