இந்தியாவின் தங்க வயல்!

இந்தியாவின் தங்க வயல்!
Updated on
1 min read

கோலார் தங்கச் சுரங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருந்தது. இந்தியாவின் மொத்தத் தங்க உற்பத்தியில் 95 சதவீதத் தங்கம் இங்குத்தான் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்தக் கோலார் தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டதில் திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பங்குண்டு. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் இந்தச் சுரங்கம் பெரிய அளவில் வளர்ந்தது. 1880-ம் ஆண்டில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனம்தான் இங்கே சுரங்கம் தோண்டத் தொடங்கியது.

சுதந்திரத்துக்குப் பிறகு 1956-ம் ஆண்டில் மைசூர் அரசு இந்தத் தங்கச்சுரங்கத்தை அரசுக்குச் சொந்தமாக ஆக்கியது. சுரங்கத்தின் பெயர் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்று மாறியது. கடந்த 136 ஆண்டுகளில் இங்குக் கிட்டத்தட்ட 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் தங்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டப்பட்டுள்ளது.

தற்போது இங்கே தங்கம் தோண்டியெடுக்கப்படுவதில்லை. தங்கத்தின் மீதான் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால், இந்தச் சுரங்கத்தைத் திரும்பவும் திறக்க முயன்று வருகிறார்கள். இந்தத் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். இப்பவும் கோலார் பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

தகவல் திரட்டியவர்
பா. ஸ்ரீதர், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
கிருஷ்ணகிரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in