பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம்
Updated on
1 min read

இந்த உலகில் சிறகுகள் உள்ள உயிரினங்கள், பறவைகள் மட்டுமே. அவற்றின் சிறகுகள் மனிதர்களின் முடி மற்றும் நகங்களில் உள்ள கெராட்டின் பொருளால் ஆனது. மனிதர்களின் புஜங்களில் உள்ள அதே எலும்புகளின் அமைப்பில்தான் பறவைகளின் இறகுகளும் உள்ளன. ஆனால், அதன் அமைப்புதான் வித்தியாசமானது. பறவையின் எலும்புக்கூட்டில் உள்ள சில எலும்புகள் உள்ளீடற்றவை. அதனாலேயே பறவைகளால் காற்றில் பறக்கமுடிகிறது. உலகில் 9 ஆயிரத்து 800 வகை பறவை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

பறவைகளின் பண்புகள்

#முதுகெலும்பிர்கள்

#வெப்பரத்த உயிர்கள்.

#சிறகுகள் கொண்டவை

#கடினமான, நீர்புகாத ஓடுகளைக் கொண்ட முட்டைகளை இடும். பெற்றோர் பறவைகள், முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை அடைகாக்கும். குஞ்சுகள் வளரும் வரை உணவூட்டிப் பாதுகாக்கவும் செய்யும்.

ஒசனிச்சிட்டு

உலகில் உள்ள பறவை இனங்களிலேயே சிறிய பறவையினம் ஒசனிச்சிட்டு. இது தேன்சிட்டைப் போலவே அந்தரத்தில் இறக்கையை அடித்துக்கொண்டே ஒரு செடியில் உள்ள பூவிலிருந்து தேனைக் குடிக்கும். தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இப்பறவை 5 சென்டிமீட்டர் நீளமே கொண்டது. எடை 1.8 கிராம் மட்டுமே இருக்கும். இரண்டேகால் அங்குலம் உள்ள ஒசனிச்சிட்டு 9 அடி உயரமுள்ள தீக்கோழி வரை பல்வேறு பறவையினங்கள் இந்த பூமியில் காணப்படுகின்றன.

நெருப்புக்கோழி

உலகிலேயே மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழி. இவை எட்டு அடி வரை வளரக்கூடியவை. பறக்க முடியாதவை. நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆப்பிரிக்க பாலைவனங்களிலும், சவானா புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. நெருப்புக்கோழி இடும் முட்டைகள் அளவில் பெரிய முட்டைகளாகும். பகலில் பெண் பறவையும், இரவில் ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in