

யோசித்து விடை சொல்
படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் குறிப்பிட்ட வகையில் அடுக்கப்பட்டுள்ளன. அதைப் புரிந்துகொண்டு காலியிடத்தில் என்ன எண் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்?
கண்டுபிடி
படத்தில் உள்ள விநோத விலங்கு காட்டிலிருந்து தப்பி வந்துவிட்டது. ஆனால் இந்த விலங்குக்குள் பல விலங்குகள் ஒளிந்துள்ளன, அவற்றைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…
கண்ணாமூச்சி
நாம் தினந்தோறும் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்கள் இந்தப் படத்துக்குள் ஒளிந்துள்ளன. அந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்கிறீர்களா?
- ராஜே
தவறுகள் என்ன?
இந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள். இதில் சில தவறுகள் இருக்கின்றன. அவற்றை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
- வாசன்
விடுகதை
1. போவோர் வருவோருக்கு வழிகாட்டுவான். ஆனால், பேச மாட்டான். அவன் யார்?
2. கல் என்பார். இவனைக் கடித்துவிட்டால் ‘மெல்’ என்பர். யார் இவன்?
3. பாம்பைப் போல் படம் எடுத்து ஆடும் இவனுக்குப் பாம்பைக் கண்டால் கொலை வெறி வரும். அது என்ன?
4. வளைந்து வளைந்து மரத்தில் தொங்கும், இது பாம்பும் இல்லை. வெட்டி வெட்டி உண்ணலாம். இது ரொட்டியும் இல்லை. அது என்ன?
5. வரிகள் எத்தனை இருந்தாலும் சுமந்து பழகியவன். இவன் யார்?
6. ஒற்றைக் கால் உள்ளவன் இவன். இவனை ஆட்டுவிக்கும் சூத்ரதாரி சுட்டிப் பையன். இவன் யார்?
7. பற்ற வைக்க அவசியமில்லை என்றாலும் பளீர் ஒளி உண்டு. இது என்ன?
8. பற்ற வைக்க முடியாது. பகலிலும் இரவிலும் ஊருக்கெல்லாம் வெளிச்சம் தருவார்கள். யார் இவர்கள்?
9. மாலை போலக் கோத்திருக்கும். பற்ற வைத் தால் சிதறி உதிரியாகிவிடும். இது என்ன?
10. சங்கிலியால் பூட்டப்பட்ட பளிச் பளிச் வண்ண மின்மினிப் பூச்சிகள். அது என்ன?
- த. ஜீவிதா, 10-ம் வகுப்பு, அரசு உயர் நிலைப் பள்ளி, பி.கரட்டுப்பாளையம். கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.