

தேவையான பொருட்கள்:
கார்ட்போர்டு அட்டை, மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ண செவ்வக வடிவ போஸ்டர் பேப்பர், குண்டூசி, பசை, கத்திரிக்கோல்.
செய்முறை:
1. கார்ட்போர்டு அட்டையில் ஐந்து செ.மீ. விட்டமுடைய வட்டத்தை வரைந்து, அதை வெட்டியெடுக்கவும்.
2. படத்தில் காட்டியிருப்பது போல போஸ்டர் பேப்பரில் வளைவாக வரைந்து, அதை வெட்டவும். நீளவாக்கில் இருக்கும் வெட்டிய பகுதியின் முனையை உள்பக்கமாக மடித்து, வட்ட வடிவ கார்ட்போர்டு அட்டை மீது ஒட்டவும்.
3. குண்டூசியின் தலைப்பக்கம் அடியில் வருவது போல வைத்து வட்ட வடிவ கார்ட்போர்டின் மையத்தில் குத்தவும்.
4. குண்டூசியின் தலைப்பாகத்தைப் பிடித்துக்கொண்டு அட்டையை லேசாகச் சுழற்றவும். மஞ்சள் நிற தீபம் அழகாகச் சுழலும்.