

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். குறுகிய குறிப்புகளில் கண்டுபிடித்தால், நீங்கள் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். தயாரா?
1. இங்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் ஏ.டி.எம். கருவிகள் உள்ளன. எனவே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிறைய ரொக்கத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கும்.
2. உலகில் மெட்ரிக் அளவையை ஏற்றுக்கொள்ளாத மிகச் சில நாடுகளில் இதுவும் ஒன்று.
3. ஒளிப்படத்தில் காணப்படும் சாம்பல் வண்ண மயில்தான் இந்த நாட்டின் தேசியப் பறவை.
4. 1948-க்கு முன்பு இந்த நாடு பிரிட்டன் வசமிருந்தது.
5. தேக்கு மரத்துக்குப் பெயர்போன நாடு.
6. முன்பு மிக அதிக அளவில் தமிழர்கள் இங்கு வாழ்ந்தனர்.
7. இங்கு வசிப்பவர்கள் 89 சதவீதம் பேர் புத்த மதத்தினர்.
8. இந்த நாட்டின் பெயர் ஐந்து தமிழ் எழுத்துகளைக் கொண்டது. என்றாலும் மூன்று தமிழ் எழுத்துகளால் ஆன அதன் பழைய பெயர்தான் இங்கு பிரபலம்.
9. 1962-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை ராணுவ ஆட்சி நடைபெற்ற நாடு.
10. இந்த நாட்டைச் சேர்ந்தவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.