

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்து விட்டால் இரட்டைப் பாராட்டு.
1. படத்தில் உள்ள இந்த நாட்டின் சுற்றுலாத் தலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
2. வெள்ளங்களாலும், கடும் புயல்களாலும் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு நாடு.
3. இதன் பிரதமர்களாக சமீபகாலமாக இரு பெண்மணிகள்தான் மாறி மாறித் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
4. இதன் நாணயம் டாகா (Taka).
5. கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய இரு நதிகளும்கூட இங்கு பாய்கின்றன.
6. இது தனி நாடாக உருவாவதற்கு இந்தியாவும் உதவி செய்தது.
7. ஒளிப்படத்தில் உள்ள கவிஞருக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு.