காகித பொம்மை: ஆரிகாமி பென்சில்

காகித பொம்மை: ஆரிகாமி பென்சில்
Updated on
2 min read

உங்களுக்குப் பேப்பர் கப்பல் செய்யத் தெரியும் தானே? அப்படிக் காகிதத்தை மடிச்சு பொம்மை செய்றதுக்குப் பேரு ஆரிகாமி (Origami), ஜப்பானியக் காகித மடிப்பு கலை. ஜப்பான்காரங்க இப்படிக் காகிதத்தை மடிச்சே, ஏகப்பட்ட பொம்மைகளைச் செஞ்சிடுவாங்க. நாமப் பாக்குற எல்லாத்தையும் இப்படிப் பொம்மையா செய்யலாம். உங்கள் வீட்ல கலர்கலர் பென்சில்கள் இருக்கின்றனவா? வரிசையாகக் கலர் பென்சில்களை அடுக்கி வைச்சா, வானவில் மாதிரி அழகா இருக்கும் இல்லையா? அதுபோன்ற கலர்கலர் பென்சில்களை, காகிதத்தை வச்சு நீங்களே செய்யலாம். தேவையானவை: ஒரு பக்கம் வெள்ளை வடிவிலும் மறுபக்கம் கலராகவும் உள்ள சற்றே தடித்த காகிதம்.

1. உதாரணமாக மஞ்சள் நிறத் தடித்த காகிதத்தை எடுத்துக்கொள்வோம். படத்தில் காட்டியுள்ளது போலச் செவ்வக வடிவக் காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அதை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள்.

3. இப்போது வெள்ளை நிறப் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். அம்புக்குறியிட்ட வலது மேற்புற ஓரத்தை உட்புறமாக இழுக்க வேண்டும்.

4. வலது மேற்புற ஓரத்தைப் படத்தில் காட்டியுள்ளது போலத் மடியுங்கள்.

5. இப்போது மஞ்சள் பக்கமாகத் திருப்பி அம்பு குறியிட்ட பாகத்தை உட்பக்கமாக இழுங்கள்.

6. அதை அப்படியே மடியுங்கள்.

7. இப்போது வெள்ளைப் பக்கமாகத் திருப்பி வைத்துக்கொண்டு அதன் வலது, இடது பக்கங்களை உட்புறமாக மடிக்கவும்.

8. பென்சிலின் கலர் அடிப்பாகம் கிடைத்து விடும். பென்சிலின் முனை கூர்மையாக இருக்கும் அல்லவா? அதனால் ஏற்கெனவே கூர்மையாகத் தெரியும் பகுதியை முக்கோண வடிவில் உட்புறமாக மடித்தால், அழகான பென்சில் தயார்.

9. இப்போது மஞ்சள் கலர் பென்சில் தயாராகிவிட்டதா?

இதேபோல் வெவ்வேறு கலர் காகிதங்களில் பென்சில்களைத் தயார் செய்யுங்கள். மேலே காட்டியிருப்பது போல ஒவ்வொரு ஸ்டெப்பாகச் செய்யவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in