

தேவையான பொருட்கள்: மூன்று சிறிய காகிதத் தட்டுகள், பிரவுன் சார்ட் பேப்பர், கறுப்பு மார்க்கர் பென், ஸ்டேப்ளர், கிரேயான்கள், கத்தரி மற்றும் க்ளூ ஸ்டிக்.
செய்முறை:
1. தட்டில் மூன்றில் ஒரு பகுதியை உள்வாக்கில் மடியுங்கள். படத்தில் காண்பித்திருப்பது போல இரண்டு பக்கமும் கத்தரியுங்கள்.
2. இரு பக்கமும் வெட்டிய பக்கத்தை மடித்து ஆந்தையின் கொம்பைப் போலப் படத்தில் காட்டியபடி உருவாக்கவும். ஒட்டிய பகுதியின் மேல் கருப்பு மார்க்கர் பென்னால் கண்கள் வரையவும்.
3. பிரவுன் சார்ட் காகிதத்தை எடுத்து, கோன் வடிவில் சுருட்டி கண்களுக்கு கீழே மூக்காக வைத்து ஸ்டேப்ளர் அடிக்கவும்.
4. இன்னொரு காகிதத் தட்டை எடுத்து, ஆந்தையின் தலையை ஒட்டியோ, ஸ்டேப்ளர் அடித்தோ பொருத்தவும். பிரவுன் சார்ட் பேப்பரை எடுத்து ஆந்தைக்குக் கால்கள் செய்துகொள்ளவும்.
5. ஆந்தையின் சிறகுகளுக்கு மூன்றாவது தட்டை எடுத்து, இரண்டாக வெட்டி ஒட்டவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறகுகளில் வண்ணம் பூசுங்கள். கண்ணை உருட்டி முழிக்கும் இந்த ஆந்தையை உங்கள் ரைட்டிங் டேபிளுக்குப் பக்கத்தில் மாட்டி வைத்துக்கொள்ளலாம்.