

மழை வரும்போது காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடி இருப்பீர்கள். இனி, காகிதத்துக்குப் பதில் தீப்பெட்டியில் படகு விட்டும் நீங்கள் விளையாடி மகிழலாம். தீப்பெட்டிப் படகு செய்து பார்க்க நீங்கள் தயாரா?
தேவையான பொருட்கள்:
ஒரு காலி தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்றும் தண்ணீர் நிரம்பிய அகலமான பாத்திரம்.
செய்முறை:
# படம் 1-ல் காட்டியபடி தீப்பெட்டியின் இரு புறமும் தீக்குச்சிகளைச் செருகுங்கள்.
# படம் 2-ல் உள்ளது போல இரண்டு குச்சிகளுக்கும் இடையே ரப்பர் பேண்டை மாட்டுங்கள்.
# படம் 3-ல் உள்ளது போல ரப்பர் பேண்டுகளுக்கு நடுவே சிறிய மரத் துண்டைச் செருகுங்கள் (இந்த மரத்துண்டுதான் நமது படகின் துடுப்பு).
# படம் 4-ல் காட்டியபடி மரத்துண்டை முறுக்குங்கள்.
# படம் 5-ல் உள்ளது போல நீரில் அந்தத் தீப்பெட்டியை வைத்து முறுக்கிய மரத்துண்டை விட்டுவிடுங்கள். இப்போது மரத்துண்டு சுற்றத் தொடங்கும். அப்போது தீப்பெட்டிப் படகு போல நகரும். பார்ப்பதற்கு விசைப்படகு செல்வது போலவே தோன்றும்.