

பரத் கடத்தப்படுகிறான். ஏன்? பல கோடி மதிப்புள்ள புதையல் உள்ள இடத்தைத் தெரிந்து, அதை கொள்ளையடிக்கத்தான். இந்தப் புதையலில் பணம், வைரங்கள், உயிர் காக்கும் மூலிகை ரகசியங்கள், உருவத்தை மறைத்துக்கொள்ளும் ரகசியங்கள், மாய மோதிரங்கள், 500 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வைக்கும் மருந்து குப்பிகளும் உள்ளன.
இந்தப் புதையலை இன்று மாலை 5 மணிக்குள்ளாக மட்டுமே எடுக்க முடியும். விட்டுவிட்டால், அவை அழிந்து பஸ்பமாகிவிடும். இது மறைந்திருக்கும் இடம் மற்றும் ரகசியங்களும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பரத்துக்கு மட்டுமே தெரியும். அதனால், பரத்தை கடத்தி அந்த இடத்துக்குப் போகக் கொள்ளைக்கூட்டத் தலைவன் மாயாவி திட்டம் போடுகிறார். இதற்குப் பர மறுத்துவிடுகிறான். கொள்ளையர்கள் கடத்தி வைத்திருக்கும் இடத்திலேயே பர மயக்கமாகிறான்.
அதனால், பரத்தை கட்டியபடியே விட்டுவிட்டு, பரத்தின் கிராமத்துக்குக் கொள்ளைக் கும்பல் குதிரையில் செல்கிறது. அவன் வீட்டைச் சோதனை செய்யக் கும்பல் முடிவு செய்கிறது. இடைப்பட்ட நேரத்தில் பரத் கண் விழிக்கிறான். அவன் தம்பி பிரியனுக்கு ஒரு ரகசிய அடையாளக் குறி மூலம் செய்தியை அனுப்புகிறான். இந்தச் செய்தியை யாரும் படிக்க முடியாது. இந்த ரகசியக் குறியீடு செய்தியைப் பிரியன் எளிமையாகப் படித்து அதற்குரிய நடவடிக்கையை எடுப்பான்.
இந்த ரகசியச் செய்தியில் புதையல் இருக்குமிடம் மற்றும் அதை எப்படி எடுப்பது போன்ற குறியீடுகள் இருந்தன. கொள்ளையர்களுக்கு இது கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக இந்தக் குறியீடுகள். இந்தப் புதையலை எடுத்துவிட்டால் பரத்துக்கு எந்தத் துன்பமும் வராது. இந்தச் செய்தி டிக்கி மூலமாகப் பிரியனுக்குக் கிடைக்கிறது. அவன் அரை மணி நேரத்துக்குள் இந்தச் செய்தியை அறிந்து, அந்தப் புதையலை எடுக்க வேண்டும்.
இப்போது நீங்கள்தான் பிரியன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த ரகசியக் குறியீடு செய்தியைச் சீக்கிரமாகக் கண்டுபிடித்துச் செய்தியைச் சொல்ல வேண்டும். உங்களுக்கு உதவியாகக் குறியீடு அட்டவணை உள்ளது. இதைப் பார்த்து, மஞ்சள் கட்டங்களில் செய்தியை நிரப்புங்கள் பார்ப்போம்!