

நமக்கு மட்டும் ஒரு வால் இருந்தா, எவ்வளவு ஜாலியா இருக்கும்? குரங்குக் குட்டி மாதிரியே மரக்கிளையில் வாலால் சுருட்டிப் பிடித்துக்கொண்டு உற்சாகமா தொங்கலாம், ஆடலாம், பாடலாம்.
நமக்கு ஊஞ்சலில் ஆட வேண்டும் என்ற ஆசை அதிகமா இருக்கிறதுக்குக் காரணம், நமது மூதாதைகளான குரங்குகள் மரத்தில் வாழ்ந்ததும், அதில் தொங்கிக்கிட்டு திரிந்ததும்தானாம்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். உயிரினங்களுக்கு எதுக்கு இந்த வால்?
உலகிலுள்ள பெரும்பாலான உயிரினங்களுக்கு இருக்கும் வால்கள் வித்தியாச வித்தியாசமானவை. ஒவ்வொண்ணும் ஒரு வகை, அத்தனையும் புது வகை. வண்ணம், வடிவம், பயன்பாடு என எல்லாமே வித்தியாசம்.
தங்களுக்கு நெருக்கமானவரைப் பார்த்தா நாய்க்குட்டிகள் வாலை ஆட்டி, நெருக்கத்தைத் தெரிவிக்கும். மீனோட வால், நீந்தவும், தண்ணீரில் திசை திரும்பிப் போகவும் பயன்படுது. மழையின்போது மயில் தன்னோட தோகை அல்லது வாலை விரித்து ஆடும். இதெல்லாம் நமக்குத் தெரிஞ்ச விஷயம்.
பல்லி தன்னோட எதிரி விலங்கை ஏமாத்துறதுக்கு வாலைத் துண்டித்துவிட்டு, தப்பி ஓடிவிடும். தேள் தன் வாலில் உள்ளக் கொடுக்கால் கொட்டி, தன் இரையைக் கொல்கிறது. இதையெல்லாம் ‘வால்கள்' என்ற புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம். அதைவிட அழகா, சூப்பரா இருக்கிறது அதானு ராய் வரைந்துள்ள ஓவியங்கள்தான்.
நமக்கு வால் இல்லேன்னா என்ன? புத்தகத்தில் இந்த வால்களைப் பார்த்து சந்தோஷப்படுவோம்.
வால்கள், ஹைட்ரோஸ் ஆலுவா, தமிழில்: கோகிலா, ஓவியங்கள்: அதானு ராய், தொடர்புக்கு: நேஷனல் புக் டிரஸ்ட், (என்.பி.டி.), பள்ளி கல்வித் துறை வளாகம் (டி.பி.ஐ.), நுங்கம்பாக்கம், சென்னை - 600 006