

தேவையான பொருட்கள்:
மூன்று வெவ்வேறு நிறங்களில் வழுவழு தாள், சார்ட் பேப்பர், பென்சில், பெயிண்ட், ஸ்ட்ரா, கறுப்பு மணிகள், கத்தரிக்கோல், பசை.
செய்முறை:
1. அட்டை முழுவதும் பிரவுன் நிறப் பெயிண்ட் பூசவும்.
2. பெயிண்ட் காய்ந்ததும் அதில் படத்தில் காட்டியிருப்பது போலச் சிறிய வட்டமும் அதன் அடியில் நீள்வட்டமும் வரையவும். வரைந்திருக்கும் பட்டாம்பூச்சியின் தலை, உடல் வடிவத்தை வெட்டியெடுக்கவும்.
3. ஸ்ட்ராவை இரண்டு துண்டுகளாக வெட்டவும். இவற்றைப் பட்டாம்
பூச்சியின் தலையில் ஆன்டெனா போல இருக்கும்படி ஒட்டவும்.
4. உங்கள் கையை மூன்று வழு வழு தாள்களின் மீதும் வைத்து டிரேஸ் எடுக்கவும். அவற்றை வெட்டவும். இப்போது மூன்று ஜோடி வெவ்வேறு நிறங்களைக் கொண்ட கைகள் கிடைக்கும்.
5. பக்கத்துக்கு மூன்று நிறங்கள் வீதம் வெட்டியெடுத்த கை டிசைனைப் பட்டாம்பூச்சியின் உடலில் ஒட்டவும். இரண்டு கறுப்பு மணிகளைப் பட்டாம்பூச்சியின் கண்களாக ஒட்டிவிட்டால் பல வண்ணப் பட்டாம்பூச்சி உருவாகிவிடும்.