பட் பட் பட்டாசு!

பட் பட் பட்டாசு!
Updated on
1 min read

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருக்கு. பட்டாசுகளை வெடிக்கக் காத்துட்டு இருக்கீங்களா? நீங்க இப்படி ஆசையோட வெடிக்கிற பட்டாசுளைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா?

சீனர்கள்தான் முதன்முதலில் வெடி மருந்தையும் பட்டாசுகளையும் கண்டுபிடித்தார்கள். கி.பி 960-1279ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சி செய்த லிங் வம்ச காலத்தில்தான் காகிதக் குப்பையில் வெடிமருந்தைத் திணித்து வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பட்டாசுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு ‘பைரோடெக்னிக்ஸ்’ என்று பெயர். டபாஸ் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்துதான் பட்டாசு என்ற பெயர் தோன்றியது. டபாஸ் என்றால் உரத்த ஒலி என்று அர்த்தம். இதேபோல் ஒளி என்ற பொருள் தரும் மஹதாப் என்ற உருதுச் சொல்லில் இருந்தே மத்தாப்பு என்ற பெயர் வந்தது.

பட்டாசுகள் பல வண்ணங்களில் ஜொலிக்கவும் காரணங்கள் உண்டு. பட்டாசு மருந்துக் கலவையில் பேரியம் கலக்கப்பட்டால் பச்சை நிறமாக எரியும். ஸ்டான்சியம் கலந்தால் சிவப்பு நிறமாக எரியும். சோடியம் கலந்தால் மஞ்சள் நிறத்தில் எரியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in