

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே
பறந்து நீங்க வாங்க!
பக்கத்தில்தான் நூலகம்
இங்கே வந்து படிங்க!
அறிவுப் பசிக்கு நூல்கள்
அடுக்கி இங்க இருக்குது!
வரலாறும், விஞ்ஞானமும்
எல்லாம் இங்க கிடைக்குது!
கணினி கற்க வழிகளும்
புத்தகங்களில் உள்ளது!
கைத்தொழில்கள் செய்து பழக
பாடங்கள் மிகவும் நல்லது!
தமிழ்கூறும் இலக்கியங்கள்
நிறைய இங்க இருக்குது!
அமிழ்து போன்ற திருக்குறளும்
வாழ்க்கை நிலையை உயர்த்துது!
கதை, கவிதை, சித்திர நூல்
வகைவகையாய் இருக்குது!
விதைகள் போல இவை படித்து
விருட்சமாக உயருவோம்!
- மயிலாடுதுறை இளையபாரதி